Posts

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக குரல் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்

Image
நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.
நடிகர் ஜி.வி.பிரகாஷ் சினிமாவில் மட்டுமல்லாது சமூக பிரச்சனைகளிலும் குரல் கொடுப்பவர். ஜல்லிக்கட்டு போராட்டம், விவசாயிகள் பிரச்னை, மீனவர் பிரச்னை என பல பிரச்சனைகளில் குரல் கொடுத்திருக்கிறார்.
அவர் தற்போது பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார். இது குறித்து ட்விட்டரில் அவர், 'விவசாய ஏழை எளிய உழைக்கும் பாட்டாளி மக்கள் தாங்கமுடியாத பேருந்துகட்டண உயர்வு சுமையை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டம் ஓராண்டு நிறைவு: கமல் வாழ்த்து

Image
கடந்த ஆண்டு உலகையே திரும்பி பார்க்க வாய்த்த நிகழ்வு ஜல்லிக்கட்டு போராட்டம். ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி இளைஞர்கள் தன்னெழுச்சியாக மெரினா கடற்கரையில் தொடங்கிய போராட்டம் தமிழ்நாடு முழுவதும் தீவிரமடைந்தது.
இந்த போராட்டத்தின் தீவிரத்தால் ஜல்லிக்கட்டு தடை நீக்கப்பட்டு அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. இன்றுடன் அந்த போராட்டத்தின் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அதற்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில்,'இன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தின் ஆண்டுவிழா.  சாமானியர்கள் வென்ற புரட்சி. தமிழனின் தளரா மனமும் அயரா தன்மையும் கண்ட  வெற்றி. வாழ்க நற்றமிழர்!' என்று குறிப்பிட்டுள்ளார்.

பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் 25ஆம் தேதி வெளியாகிறது பத்மாவதி

Image
பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோன் நடித்திருக்கும் படம் பத்மாவதி. படத்தின் போஸ்டர் வெளியானதிலிருந்து அதன் மீதான சர்ச்சைகளும் ஆரம்பித்தன. 
ராணி பத்மாவதியின் வரலாறு தவறாக சித்தரிக்கப் படுவதாக கூறி பலரும் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என கூறினர்.
இந்நிலையில் இந்த படத்தின் பெயரை பத்மவத் என்ற மாற்றி வெளியிட முடிவுசெய்தனர். ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பத்மாவதி படத்திற்கு போடப்பட்ட தடையை நீக்கியிருந்த நிலையில், மீண்டும் படத்தை தடை செய்ய கோரி மத்திய அரசும் ஒரு சில மாநில அரசுகளும் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இன்று இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் படத்திற்கு தடை விதிக்க முடியாது என்றும் தீர்ப்புக்கு மரியாதையை கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. எனவே படம் திட்டமிட்டபடி ஜனவரி 25ஆம் தேதி வெளியாகவுள்ளது.

பிரியங்கா சோப்ராவின் ஹாட் பிகினி புகைப்படங்களுக்கு கிளிக் செய்யவும்

Image

தனுஷ் தயாரிப்பில் 'விஜய் டி.வி' தீனா கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படம்

Image
விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் கலக்க போவதுயாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தீனா. கலக்க போவது யாரு சீசன் 5 ல் கலந்து கொண்டு இறுதி போட்டி வரை முன்னேறியவர். விஜய் டி.வி. வரும் ரசிகனின் போன் கால் மூலம் இவர் இன்னும் பிரபலமானார்.
தற்போது இவர் ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.  அந்த படத்தை ஒண்டர் பார் நிறுவனம் சார்பில் நடிகர் தனுஷ் தயாரிக்கிறார்.  இதற்கு முன்பு ப.பாண்டி படத்தில் தனுஷின் நண்பராக தீனா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த  ஆண்டு மலையாளத்தில் நதீர்ஷா இயக்கத்தில் வெளியான 'கட்டப்பனையிலே ரித்விக் ரோஷன்' என்ற படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இப்படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது. அந்த படத்தின் கதாநாயகனாக தீனா நடிக்கவுள்ளார்.

கோல்ப் விளையாடும் காஜல் அகர்வால் புகைப்படங்கள்

Image

நடிகர் பிரஷாந்திற்கு இப்படி ஒரு நிலைமையா ? ரசிகர்கள் அதிர்ச்சி

Image
தமிழ் சினிமாவில் 90களில் கோடி கட்டி பறந்தவர் நடிகர் பிரஷாந்த். பல இளம் பெண்களின் சாக்லேட் பாய் ஆக இருந்த பிரசாந்தின் மார்க்கெட் விஜய் அஜித்தை விடவும் உயரத்தில் இருந்தது.
தற்போது அவர் போதிய பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார். அதனால் கதாநாயகனுக்கு அண்ணனாக நடிக்க முடிவு செய்துவிட்டார். தெலுங்கில் ராம் சரணுக்கு அண்ணனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 
சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் பூஜை நடை பெற்றது. விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த படத்தில் விவேக் ஓபராய் சினேகா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.  90களில் பல வெற்றிப்படங்கள் கொடுத்த பிரசாந்தின் இந்த முடிவால் அவரின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

3 நாட்களுக்கு 30 கோடி ! விளம்பரத்தில் நடிக்க மறுத்த ரஜினி

Image
எப்பொழுதும் விளம்பரத்தில் நடிக்க விரும்பாதவர் ரஜினி. அவர் ஒரு சில சமூக விழிப்புணர் விளம்பரங்களில் மட்டுமே நடித்துள்ளார். கமர்சியல் விளம்பரங்களில் என்றுமே நடிக்க விரும்பாதவர் அவர்.
சமீபத்தில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் ரஜினியின் அருகில் அமர்ந்திருந்தார் அப்போது அவரிடம் விளம்பரத்தில் நடிப்பது பற்றி கேட்டிருக்கிறார், 3 நாட்களுக்கு 30 கோடி தருவதாகவும் கூறியிருக்கிறார்.
அதைக்கேட்ட ரஜினி தன்னுடைய Trade Mark  சிறப்பை மட்டுமே பதிலாக தந்து மறுத்திருக்கிறார். இந்த செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
'என்னுடைய ரசிகர்கள் எந்த பொருளை வாங்க வேண்டும் என்று நான் கூற முடியாது. என்னால் அவர்களை பொழுது போக்க மட்டுமே முடியும்' என்று எப்போதுமே கூறுபவர் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.

'உதயம் NH4' இயக்குனருடன்,வெற்றிமாறன், சமுத்திரக்கனி இணையும் புதியப்படம்

Image
இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் சமுத்திரக்கனி ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்திற்கு சங்கத்தலைவன் என்று பெயர் சூட்டியுள்ளனர்.
இந்த படத்தை படத்தை மணிமாறன் இயக்குகிறார். இவர் சித்தார்த் நடித்த 'உதயம் NH4', ஜெய் நடித்த 'புகழ்' ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜவுளி துறையில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் இந்த படத்தை இயக்கவிருக்கிறார் மணிமாறன். தறி என்ற நாவலை மையப்படுத்தி இந்த கதையை உருக்கியிருக்கிறார். இந்த படத்தில் சமுத்திரக்கனி, கருணாஸ், விஜய் டி.வி ரம்யா ஆகியோர் நடிக்கின்றனர்.

வைரலாகும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள்

Image

இன்று தொடங்குகிறது மாரி 2 படத்தின் ஷூட்டிங்

Image
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம் மாரி. கமர்சியல் படமாக வெளிவந்த இப்படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றது. இந்த படத்தில் காஜல் அகர்வால், ரோபோ சங்கர், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருக்கிறார் பாலாஜி மோகன். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசைமைக்கிறார். இந்த படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது.
இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக நடிகர் தனுஷ் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் கிருஷ்ணா, சாய் பல்லவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கின்றனர்.